Friday, November 13, 2009

தமிழ் ரசிகப்பெருமக்களே

அன்புள்ள தமிழ் ரசிகப்பெருமக்களே....

எந்தப் பிரச்சினைக்கும் முன்னின்று குரல் கொடுக்கும் நம் தமிழ்த்திரையுலகில்...

தமிழ் சரளமாய் பேசத்தெரிந்த கதாநாயகிகளே இல்லை என்பதைப் பற்றி பேச யார் உள்ளனர்....

இப்பபொழுது தமிழில் பாடல் எழுத, இயக்க, என அனைத்துத் துறைகளிலும் நமது தமிழ்ப்பெண்கள் முன்நிற்க... கதாநாயகி என்ற இடத்தில் மட்டும் தமிழ்மொழி தெரியாதவர்களை (பொம்மைகளை) கொண்டுவந்து விடுகிறார்கள்.

பாத்திரம் பொம்மைபோல் இருக்கிறது என்பதனால் நமது தமிழ்ப்பெண்கள் பொம்மையாய் நடிக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது 6 கோடிக்கும் மேல் உள்ள தமிழ் சமுதாயத்தில் அவ்வாறு பொம்மையாய் நடிக்க தமிழ் பெண்கள் யாரும் இல்லையே என்று கருதுவதாலோ என்னவோ இன்னும் நம் தமிழ் சினிமாவில் அத்தனை தகுதிவாய்ந்த தமிழச்சி கிடைக்கவில்லையோ என்னவோ.....


ஒருவேளை கதாநாயகி அல்லாத பாத்திரங்களில்தான் நடிக்க வாய்ப்பு (ஸ்கோப்) உள்ளது என்பதாலோ என்னவோ திரையுலகம் இன்னமும் தமிழ்ப்பெண்களை நாயகிகளாக்க முயற்சிக்கவில்லையோ....!!!!

ஏதோ எனக்குத் தோனுனதச் (கவலையை) சொன்னேன்....!!!

2 comments:

  1. உங்கள் கருத்து கணிப்பு மிக அருமையாக இருந்த்தது.ஆனால் நாட்டில் என்னல்லாமோ நடக்குது,இது ஒரு ப்ராப்ளம் என்று இதை பற்றி விளக்கமளித்த உங்களுக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete