Thursday, October 29, 2009

கலர் டி.வி.


கலர் டி.வி.

பெயரைக் கேட்டாலே கலர்புல்லா இருக்கு இல்ல....

1990 களில் டி.வி என்பதே பெரிய விஷயமாக இருந்தது, அதுவும் கருப்பு-வெள்ளை டிவிக்கே அந்த மவுசு... அப்போது எல்லாம் இவ்வளவு சேனல்களும் இல்லை...

அதுவும் எல்லாரும் எளிதில் வாங்கும்படியாகவும் டி.விக்கள் இல்லை..

அதற்காகத்தான், அந்த அறிவியல் படைப்பைப் பயன்படுத்தி செய்திகள் வாயிலாக கிராமப்புற மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிந்து பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் கிராம பொது டி.வி க்களை வழங்கியது. மேலும் அதற்கென தனி அறை மற்றும் ஒரு டி.வி ஆபரேட்டர் அமைத்து அந்த வசதியை மக்களும் பயன்பெற வழிவகுத்தது.

மேலும் அடுத்து வந்த அரசுகள் அதனை கலர் டி.வி. ஆக மாற்றியது. ஆனால் அப்போது எல்லாம் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லை.. தூர்தர்ஷன் மட்டும்தான்.. அதில் என்ன நிகழ்ச்சிகளை போடுகிறார்களோ அதுதான் விதி என்று இருந்தது.. இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அதுவே பெரிய விஷயமாகப்பட்டது.

ஏன், நானும் அந்த மாதிரி பஞ்சாயத்து டி.வி.யில் செய்திகள், கிரிக்கெட், மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வளர்ந்தவன்தான்.

ஆனால் இன்றைய சூழலில் தனியார் சேனல்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட நிலையில், அந்த மாதிரி பஞ்சாயத்து டி.விக்கள் மக்களுக்கு பயன்தரவில்லை.. ஏனெனில் ஒவ்வொருவரும் தனக்கென விருப்பங்களை டி.வி நிகழ்ச்சிகளில் மீது கொண்டுள்ளனர்..

தொலைக்காட்சி சேனல்களின் ஆதிக்கம் அதிகமான இந்த சூழ்நிலையில் குறைந்தபட்சம் அனைவரும் தத்தம் வீடுகளில் டி.விக்களை வாங்கி தாங்கள் விரும்பும் சேனல்களைக் காணும் ஆவல் அதிகரித்துவிட்டது. ஆனாலும் ஓரளவு பண வசதியுள்ள மக்கள், நகரவாசிகளுக்கு அது ஒரு பொருட்டான விஷயம் இல்லைதான் என்றாலும், இன்னமும் அன்றாட வாழ்க்கை வாழும் கிராம மக்களில் பெரும்பாலான மக்கள் டி.வி. வாங்குவதை ஒரு கனவாகவே கண்டு வந்துள்ளனர்.

நகரங்களில் வாழும் மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கை முறையில் அவையெல்லாம் சாதரணமான விஷயமாகத் தோன்றும் டி.வி பல ஏழை மக்களுக்கு கனவாக இருந்துள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓட்டளித்தால் டி.வி. தருகிறேன் என்று சொல்லி ஒருவர் கேட்கும்போது, நாம் பயனற்றுப் பயன்படுத்தும் ஓட்டை வைத்து நம் இந்தக் கனவாவது நிறைவேறாதா என்றுதான் மக்கள் இந்த இலவச டி.விக்கு வாக்களித்தனர்.

யாருக்கு ஓட்டுப்போட்டாலும் நம் தேவைகளை நாம் தான் பூர்த்தி செய்யவேண்டும்... யாராலும் நம் வாழ்வில் புது மாற்றத்தை ஏற்படுத்த.......................

அய்யோ... இங்கேயும் அரசியல் உள்நுழையுதே.......


ஆயிரம் இருந்தாலும் டி.வி என்பது இன்றைய சூழலில் ஒரு அத்தியாவசியம்தான் என்பதை மறுக்க இயலாது...!!!

கருத்துரைகளைக் காண,

http://pathivukal.mywebdunia.com/2009/05/15/1242375180000.html

விளம்பரம்


நான் பள்ளிநாட்களில் மிதிவண்டியில்தான் செல்வேன்.... நிற்க...!(மிதிவண்டியல்ல)

வருடம் ஒருமுறை மிதிவண்டிக்கு பராமரிப்பு பணிக்கு ஏதாவது கடையில் கொடுத்து, பழுதுநீக்குவேன். இறுதியாக அவருடைய (கடையின்) பணிபட்டியலில்(பில்) சில இருக்கும்...

அவை கீழே::

சீட் கவர், பார் கவர், ரிம் கார்டு கவர்....

ஆனால் இவையனைத்திலும் அந்த கடையின் விளம்பரம் பதிக்கப்பட்டிருக்கும்..

யோசிக்கவும், அந்த கடையின் விளம்பர வாகனமாக நம் வண்டி மாறுவதற்கு நாமே ஏன் அவருக்கே விலை கொடுக்கக வேண்டும். மாறாக அவர்கள் அல்லவா நமக்கு விளம்பரக் கட்டணம் தரவேண்டும்..

இது மிதிவண்டியில் மட்டுமல்ல,

இது போன்று பல இடங்களில் அவர்களின் சுயவிளம்பரத்திற்கு நம்மைப் பயன்படுத்த நாம் அவர்களுக்கு கட்டணம் தருகிறோம்....!!!!

ரொம்ப வருசமா யோசிச்சது....... சொல்லிட்டேன்..... அப்பாடா........!!!!

இனி நீங்கள் உங்கள் வேலையை (விளம்பரத்தை) தொடங்கலாம்....!!!