Sunday, May 15, 2011

முதல் வீண் ஆயிரம் கோடி!

முதல் வீண் ஆயிரம் கோடி!










அது என்னதான் நல்ல திட்டமாகவோ இருந்தாலும், தனது கட்சி அல்லாத அரசு செயல்படுத்தியது என்பதற்காகவே அதனை வீண்டிக்கும் அல்லது அதனை நிறுத்தும் செயல்களில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல.

இன்று பெரும் வெற்றி பெற்று பதவியேற்கும் முன்னரே, அந்த செயலிற்கு பிள்ளையார் சுழி போடத்தயாராகிவிட்டது, தமிழக புதிய அரசு.

கடந்த வருடம் ஆயிரம் கோடி செலவில் திட்டம் தீட்டி, தமிழக சட்டசபையை உலகு வியக்கும் வண்ணம் தயார்செய்து பிரதமரை வைத்துத் திருந்த கட்டிடம் இனி என்னவாகுமோ....

மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் அரசாங்கம்....

எதற்கு இந்த வீணடிப்பு...

ஆரம்பமே ஆயிரம் கோடி பெருமானமுள்ள ஒரு கட்டிடத்தை வீணடிக்கத்தான் தமிழக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா? இல்லை அந்த கட்டிடத்தில் நீங்கள் ஆட்சிசெய்யக்கூடாது என்று ஓட்டுப்போட்டார்களா?

என்னே கொடுமை...!

ஆரம்பித்தது விளையாட்டு... கோடிகளில்...........

Wednesday, May 4, 2011

தேர்தல் நடத்தை விதி

ஏதோ வலைத்தளத்தில், தேர்தல் நடத்தை விதியின் காரணமாக நமது மாநில அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முதல்வரின் புகைப்படம் நீக்கப்பட்டதாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.

உடனே மற்ற மாநிலங்களிலும் இதே போன்று இருக்கிறாதா என்று தேர்தல் நடைபெறும் கேரளா, மேற்குவங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநில அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுக்கும் சென்று பார்த்தபோது கிடைத்தது.

இதில் நாம் பரவாயில்லை, மேற்குவங்க மாநில முதல்வரின் சுயவிவரமே தூக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற இரு மாநிலங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.

கீழே உள்ள படங்களை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்...





http://www.tn.gov.in/gov_cm.html




http://kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=95&Itemid=2285





http://www.wbgov.com/portal/banglarMukh/CMSPage/BMCMSPortletWindow?fileId=85&action=e&windowstate=normal&in.gov.wb.portal.MENU_ID_PARAMETER=28&in.gov.wb.portal.MENU_ID_PARAMETER=28&mode=view



http://assamgovt.nic.in/who_is_who/chiefminister_profile.asp