Friday, November 13, 2009

முரண்பாடு....!!!




நாம் படம் வரையும்போது,

நிலம் மற்றும் வானத்தை காண்பிக்க ப்ரௌன் மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்துகிறோம். அதே சமயம் வானம் மற்றும் நீர் பரப்பைக் காண்பிக்க

வானத்திற்கு வெண்மையையும் நீர்பரப்பிற்கு நீலநிறத்தையும் பயன்படுத்துகிறோம்.....!!!


ஏன் இந்த முரண்பாடு???!!!


ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் கடக்க முயலுபவர்களைத் தண்டிக்கும், காவலர்கள் வாகனம் மட்டும் அதே பாதையில் எதிர் திசையில் கடந்து செல்வது எதனால்.....!!!!

மாநகரப் பேருந்துப் பயணத்தில் பயணியிடம் 50பைசா சில்லறை இல்லை என சாதாரணமாகக் கூறும் நடத்துனர், அதையே பயணிகள் கூறும்போது வசைபாடுவது ஏன்????


இன்னமும் முரண்பாடுகள் தோன்றத் தோன்ற சேர்க்கப்படும்.....!!

விலைவாசி!!!

வணக்கம்!!!



நான் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமே காரணம் என்று கூறியிருந்தேன்...

ஆனால், இப்பொழுது பெட்ரோலியப் பொருட்களின் விலை கணிசமாகக் (பெட்ரோல் ரூ10.) குறைந்து கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகியும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் ஏறுமுகமாகவே உள்ளது.


இதற்கு இன்னும் காரணம் புரியவில்லை. பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரும் போராடினார்களே... இப்பொழுது அதன் விளைவாக ஏறிய மற்ற பொருடகளின் விலையேற்றத்தைக் குறைக்க யாரும் முன்வராதது ஏன்?


பெட்ரோல் விலை ஏறியபொழுது ரூ2 இல் இருந்து ரூ3. ஆகி ரூ. 4 ஆன டீ விலை இன்னமும் ரூ 4 இல் நிலை கொண்டுள்ளதே அதன் மர்மம் என்ன??

அவர்களுக்கு விலையேற்ற உதவிய பெட்ரோல் விலை இன்று குறைந்துள்ள நிலையிலும் ஒருவரும் விலை குறைப்புக்கு முன்வராதது ஏன்?

நான் தினசரி டீ குடிக்கும் கடைக்காரரிடம் பெட்ரோல் விலை குறைந்து இன்னுமும் டீ ரூ.4 இல் இருந்து குறையவில்லையே என்று கேட்டதற்கு, நான் பெட்ரோலில் டீ போடவில்லையே என்று நக்கலாகக் கேட்டார். ஆனால் அன்று விலையேற்ற உதவிய பெட்ரோல் விலை இன்று விலை குறைக்க யாவருக்கும் உதவவில்லையா????

விலை குறைப்பால் எந்த உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பலனடையவில்லையா???? நாடு இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையிலும், யாரும் விலை குறைப்பிற்கு முன்வராதது ஏன்???

இது மட்டுமல்ல இன்னமும் விடை தெரியாத நிறைய கேள்விகளால் (விலை ஏற்றத்தால்) பாதிக்கப்பட்ட அப்பாவி இந்தியர்களில் நானும் ஒருவன்....!!!

கடன் அட்டை தாரர்களுக்கு


அன்புள்ள கடன் அட்டைதாரர்களே(Credit Card)!

வணக்கம்!!!

இங்கு எனது நண்பரின் கடன் அட்டையின் பயன்பாட்டு அனுபவங்களை கூற விழைகிறேன். ஏனெனில் அதை இவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்பதற்காக....

கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு வங்கிமூலம் கடன அட்டை பெற்றார், அதனைப் பெற்ற அடுத்த ஓரிரு நாட்களில் கடன்தொகை முழுமையும் காலியாகும் அளவிற்கு அந்த முழுமதிப்பில் ஒரு மொபைல் தொலைபேசியும் வாங்கினார். மாதச் சந்தாவில் கட்டும்படி அதனை மாற்றி அமைத்தும் கொண்டு, பிறகு மூன்று மாதங்கள் தொடர்ந்து சந்தா கட்டத் தொடங்கினார். சந்தா கட்டக் கட்ட அவரின் கடன் குறைந்து தொகையின் அளவு மீண்டு கொண்டு இருந்தது. அந்தச் சமயத்தில், அவர் வேலை இழக்க நேரிட்டது அதனால் அவர் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து வேலைதேடிக்கொண்டு இருந்ததால் அடுத்த மூன்று மாத சந்தாக் கட்டமுடியாத நிலை ஏற்பட்டது. மூன்று மாத சந்தாக்களை கட்டியதால் அட்டையில் கொஞ்சம் இருப்பு சேர்ந்தது.

அவரின் செலவுக்கான பணத்தைப் பெற, நண்பர் ஒருவரின் மாத மொபல் பில்லை இவரது அட்டையின் மூலம் கட்டி, அவரிடம் பணம் பெற்று வந்தார் இதனால் மீண்டும் அட்டையின் வரம்பு காலியாகி சந்தாக் காலமும் முடிந்து, அவரது அட்டையின் வரம்பை மீறியது. அவரது இருப்பு மைனஸில் (-) சென்றதால், மைனஸ் பேலன்ஸ் மற்றும் வட்டி வீதம் பில் எகிறியது. ஒரு வழியாக அவருக்கு வேலை கிடைத்தது. இப்போதும் அவர் அந்த அட்டையின் முழுக்கடன் தொகைக்குமான வட்டி மற்றும் சேவைவரிகளை மட்டும்தான் மாதந்தோறும் கட்டிக்கொண்டுதான் வருகிறார். கடன் தொகையை அடைக்க முடியாத நிலை.

அவர் அன்றே, மொபைல் வாங்கும்முன் சற்று சிந்தித்திருந்தால்....

இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதில்லை..... சரிதானே!!

எனது முகவரி

எனது சொந்த கிராமமான குளிப்பட்டியை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.

குளிப்பட்டி எனக்குப் பெயர்காரணம் தெரியவில்லை, ஒரு சில பெரியவர்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலோ என்னவோ அதற்குமேல் ஆராயவில்லை.

இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி தரகு மையமாகவுள்ள ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்-பழனி சாலையில் மையத்தில் உள்ளது)பகுதியில், அதற்கு வடகிழக்கே கரூர் சாலையில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இப்பொழுது குளிப்பட்டி என்பது பெரியகுளிப்பட்டி, சின்னக்குளிப்பட்டி என்ற இரு ஊர்களின் தொகுப்பு ஆகும். ஆனால் குளிப்பட்டியானது சாலையிலிருந்து 1கி.மீ தூரம் உள்ளதால், சாலைஅருகில் கடையாகத் தோன்றியது பின்னர் ஊராக மாறியதால் அதையும் குளிப்பட்டி என்றே அழைத்தனர். ஆகவே குளிப்பட்டி பெரியகுளிப்பட்டியாகவும், புதிய குளிப்பட்டி சின்னக்குளிப்பட்டியாகவும் மாறியிருக்கிறது.


நாம் பேருந்திலிருந்து இறங்கி, மேற்குநோக்கி நடந்தால் முதலில் தாழையாறு (நங்காஞ்சியாற்றின் துணையாறு)வரும், அதைக் கடந்து சென்றால் (ஆற்றில் நீர் என்பது வங்காளத்தில் புயல்சின்னம் உருவாகி, அதனால் பெருமழை பெய்தால் மட்டுமே காண முடிந்த ஒன்று) உழைத்தவர்கள் உறங்குமிடம் (தகன மன்றம் என்ன தமிழ்ப் புலமை)வரும். அதையும் தாண்டிச்சென்றால் ஊரின் நினைவுச் சின்னங்களில் ஒன்றான பெரிய ஆலமரம் வரும் (அந்த மரத்தடியில் சிறிய பாறை மட்டுமே இருக்கும் அதில் அமர்ந்து மரத்தின் அழகை ரசிக்கலாம்).மேலும் சிறு தூரம் சென்றால் ஊரின் தலைவாசல் இருக்கும். அங்கு நின்று கொண்டு நேரே பார்த்தால் மேநிலை குடிநீர்தொட்டி, பக்கத்தில் சாவடி (ஊர் கூடுமிடம்), அதன் பக்கத்தில் ஊர் பண்ணாடிசிலை (முன்னாளில் முக்கியமுடிவுகளை எடுத்தவர்) அதற்கு வலதுபுறம் பெறிய பாறையாலான மேடை போன்ற அமைப்பு. பக்கத்தில் பயணிகள் குடை அதனருகில் சமுதாயக்கூடம், பக்கத்தில் நியாயவிலைக்கடை அதனருகில் நடுநிலைப்பள்ளி (நான் 8-ம் வகுப்புவரை படித்ததும், 8-ஆம் வகுப்பு பயிலும்போது பள்ளி மாணவத்தலைவனாக இருந்ததும்....) அருகில் கலைக்கூடம் அதன் வலது பக்கம் ரெட்டியம்மன் கோவில் (ஊரின் முக்கிய தெய்வம்) அதன் பக்கத்தில் நமது வினாயகர் ஆலயம் அதன் வலபுறதில் மேல்நிலைத்தொட்டியென கிட்டத்தட்ட 360 டிகிரியில் கட்டடங்களிலான ஊரின் முகப்பு.


இது இன்றைய நிலை, அதுவும் பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே...

அதற்கு முன்னர் குளிப்பட்டி என்றால் பேருந்து நிறுத்தத்தில்(சின்னக்குளிப்பட்டி) மேற்கூறிய ஆலமரத்தைவிட பெரிய ஆலமரம்தான் நினவு வரும். அது ஒவ்வொரு வருடமும் பழனிக்குப் பாதயாத்திரை வருவோர் இளைப்பாரும் மடமாகவே இருந்து சிறப்பித்தது. ஆனால் 1996 இல் ஏற்பட்ட புயலில் அது வேரோடு சாய்ந்துவிட்டது. இப்பொழுது அந்த இடத்தில் ஊரின் முக்கிய கோயிலின் நுழைவாயில் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

ஊரின் தலைவாசலில் (முகப்பில்) எப்பொழுதும் பெரியவர்கள் சிறியவர்கள் என அவரவர் நண்பர்கள் சகிதம் ஆங்காங்கே கூடுவது வழக்கம். ஆனால் இன்று இளைஞர்களை அங்கு காணவேண்டும் என்றால் ஏதேனும் பண்டிகை அல்லது திருவிழா போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமே முடியும். ஏனெனில் அனத்து இளைஞர்களும் தொழில், வேலை என்று பல்வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் (நான் கூட). இடைப்பட்ட நாளில் காண இயலாது, இது என் ஊர் மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லா ஊரின் நிலையும் அதுதான்.

இவ்வளவு பெரிய ஊரின் முக்கியத் தொழிலான விவசாயம், இன்று ஊரில் உள்ள பெரியோரால் மட்டுமே நடைபெறுகிறது. மொத்தமாக 20-35 வயதுடைய இளைஞர்கள் யாரையும் ஊரில் காண்பது அரிது (பண்டிகை நாட்கள் தவிர).

ஒரு ஊரில் இளைஞர்களே இல்லை என்பது எவ்வளவு வேதனையானது என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த மாதிரியான நிலைக்கு என்ன காரணம்????



மீண்டும் சந்திப்போம்!!!

தமிழ் ரசிகப்பெருமக்களே

அன்புள்ள தமிழ் ரசிகப்பெருமக்களே....

எந்தப் பிரச்சினைக்கும் முன்னின்று குரல் கொடுக்கும் நம் தமிழ்த்திரையுலகில்...

தமிழ் சரளமாய் பேசத்தெரிந்த கதாநாயகிகளே இல்லை என்பதைப் பற்றி பேச யார் உள்ளனர்....

இப்பபொழுது தமிழில் பாடல் எழுத, இயக்க, என அனைத்துத் துறைகளிலும் நமது தமிழ்ப்பெண்கள் முன்நிற்க... கதாநாயகி என்ற இடத்தில் மட்டும் தமிழ்மொழி தெரியாதவர்களை (பொம்மைகளை) கொண்டுவந்து விடுகிறார்கள்.

பாத்திரம் பொம்மைபோல் இருக்கிறது என்பதனால் நமது தமிழ்ப்பெண்கள் பொம்மையாய் நடிக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது 6 கோடிக்கும் மேல் உள்ள தமிழ் சமுதாயத்தில் அவ்வாறு பொம்மையாய் நடிக்க தமிழ் பெண்கள் யாரும் இல்லையே என்று கருதுவதாலோ என்னவோ இன்னும் நம் தமிழ் சினிமாவில் அத்தனை தகுதிவாய்ந்த தமிழச்சி கிடைக்கவில்லையோ என்னவோ.....


ஒருவேளை கதாநாயகி அல்லாத பாத்திரங்களில்தான் நடிக்க வாய்ப்பு (ஸ்கோப்) உள்ளது என்பதாலோ என்னவோ திரையுலகம் இன்னமும் தமிழ்ப்பெண்களை நாயகிகளாக்க முயற்சிக்கவில்லையோ....!!!!

ஏதோ எனக்குத் தோனுனதச் (கவலையை) சொன்னேன்....!!!