Monday, August 9, 2010

போராட்டம்

நமது அரசியலாளர்களின் போராட்டங்கள் பற்றிய பல விசயங்கள் புரியவில்லை. எனவே அதைப் பற்றி எழுதுகிறேன்.

அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்துகின்றனர். விதவிதமான வடிவங்களில் விதவிதமான சூழல்களில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர்.

முதலில் சாதாரண மக்கள் தங்கள் பகுதிகளின் தேவைக்காக போராட்டம் நடத்துகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி அல்லது ஏதேனும் அதிகாரிகள் வந்து போராட்டத்தை நிறுத்த ஏதேனும் நடவடிக்கையைச் செய்கின்றனர். அதற்கு ஓரளவு முடிவுக்கு வருகின்றது.

ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள். தாங்கள் இந்த நாட்டில் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை அடையாளமாகக் காட்ட ஏதேனும் அந்த டிரெண்டுக்கு ஏற்ப மக்கள் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். மக்களும் அப்பா நம்ம பிரச்சினைகளை முன்னெடுத்து போராடுகிறார்கள் என்று நினைக்கும் முன் அவர்களுது போராட்டம் நிறைவு பெறுகின்றது.


அவர்கள் போராட்டம் மூலம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா என்றால் அது ஐயம் தான். அப்போராட்டம் மூலமாக தங்களின் அடையாளத்தை காட்டுகிறார்களே தவிர அதனை வெற்றிகரமாக நடத்தி அதன் மூலம் தீர்வு எட்டப்பட்டது என்பதும் கேள்வியே.

உதாரணமாக கடந்த மாதத்தில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக அனைத்து எதிர்தரப்பினரும் மிகுந்த சமூக அக்கறையோடு போராட்டங்கள் நடத்தினர். நாடு தழுவிய பந்த் நடைபெற்றது. அதனால் ஏற்பட்டது என்ன ஒரு நாள் விடுமுறை மட்டுமே. பதிலாக அந்நாளுக்கு ஈடாக ஒரு விடுமுறை நாளை வேலை நாளாக அந்தந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன.

போராட்டம் அந்த ஒரு நாளுடன் முடிந்தது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறைந்ததா இல்லை, அதற்கு மாற்றுத் தீர்வு ஏதேனும் கிடைத்ததா. ஆனால் அதன் விலைவான விலைவாசி உயர்வு மட்டுமே மக்களை மேலும் வாட்டியது.

இப்போது அதையும் அரசியல் கட்சிகள் கையில் எடுத்து நான்கு நாட்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தன. அதன் பின் நாடே அமைதியானது. ஆனால் அந்த விலைவாசி ஏற்றம் மக்களுக்கு பழகிவிட்டது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

இதெல்லாம் பார்த்தா எனக்கு ஒன்னுமே புரியவில்லை, இந்தப் போராட்டம், பந்த் எல்லாமே ஊடகங்களுக்கான தினந்தோறுமான செய்திகளாக மட்டுமே உள்ளதே தவிர யாருக்கும் தீர்வு ஏற்படுத்தியாக இல்லை.


இது போன்ற போராட்டங்கள் பற்றி எனக்கு தெளிவாக விளங்கவில்லை.....

யாருக்காக போராடுகின்றனர்... போராட்டம் வெற்றிபெற்றதா.... அதன் பலனாக தீர்வு கிடைத்ததா... அந்தத் தீர்வு மக்களைச் சென்றடைந்ததா....!!!

எனக்கு ஒன்றுமே புரியலை.........!!!!

யாராவது என்னைத் தெளிவுபடுத்துவீங்களா????

2 comments:

  1. உங்களுக்கு விளம்பரம் தேவையா உடனே ஒரு போராட்டம் நடத்துங்கள்..அவ்லோதான் மேட்டர்...

    இனிமே யாரும் போராட்டமே நடத்தக்கூடாது நாங்க நடத்தறதுதான் இறுதி போராட்டமா இருக்கனும்னு நாமும்..ஒரு போராட்டம் நடத்தலாமா..பின்னே நாமும் பிரபலம் ஆக வேண்டாமா....

    ReplyDelete
  2. கண்டிப்பா....

    ஆனா நமக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே....!!!

    ReplyDelete