Monday, August 30, 2010

கர்நாடகாவில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

கேட்கும் போதே சந்தோசமாக இருக்கு இல்லையா.. நம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள திட்டம் கர்நாடகாவில் எப்படி என்கிறீர்களா?

ஆம், கடந்த வாரம் எனது நண்பன் ஒருவன் சிறிய மோட்டார் பைக் விபத்தில் காயமுற்றான். அவன் பெங்களூர் அருகாமையில் ஹெப்பகுடியில் அருகிலுள்ள நாரயணா ஹெல்த் சிட்டியில் அமைந்துள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் அனுமத்திருந்தனர்.

நான் அவனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அவன் சிறிய உள்காயமே அடைந்திருந்ததால் முதலுதவி பெற்று நலமுடன் இருந்தான். பின்னர் அந்த மருத்துவ மனை வளாகத்தைச் சுற்றிப்பார்த்த போது, அங்கு ஒரு சுவற்றில் "இந்த மருத்துவமனை கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது" என்றும் அதன் விபரங்களையும் தமிழில் எழுதியிருந்த பலகையைப் பார்த்தேன். வியப்புடன் நண்பனிடம் கேட்டபோது அவன் கூறியது, இது மட்டுமல்ல பெங்களூரில் பல மருத்துவமனைகளும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றான்.

அதாவது ஒசூர் பகுதியைச் சேர்ந்த எல்லைப்புறத் தமிழக மக்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர்சிகிச்சைகள் பெற இது உதவுவதாகக் கூறினான்.

இது போன்ற நமது அரசின் திட்டங்கள் கர்நாடகவிலும் செயல்படுத்தப்படுவது கண்டு மகிழ்ந்தேன். எனவே இதை நம்மவர்களும் அறிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

No comments:

Post a Comment